Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2025) | 6PM Headlines | Thanthi TV
- செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது... தெருக்களில் 2 அடிக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது....
- காஞ்சிபுரத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.... வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது...
- சென்னையை அடுத்த புழல் ஏரியில் இருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.. கனமழை எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
- திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது... சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- தொடர்மழையை தொடர்ந்து சாத்தனூர் அணையில் இருந்து ஐந்தாயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது...நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Next Story