Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2025) | 6 PM Headlines | ThanthiTV
- தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது... நாளை மாலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து மதுரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது...
- தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன...
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த மருமகனை மாமனார் கொலை செய்த விவகாரம்... ஏற்கனவே மாமனார் கைதான நிலையில், மாமியார் மற்றும் மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்....
- ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால், கடை வீதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது... இதனால் புத்தாடை வாங்க வந்த பொதுமக்களும், சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்...
- 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் ஆந்திராவில் அமைய உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்..
Next Story
