Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2026) | 6 AM Headlines | ThanthiTV
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக கரூர் சென்ற முதலமைச்சர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.......
உங்கள் விஜய் ஆட்சி நடக்கிறது.... யாரும் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.....
கரூர் கூட்ட நெரிசலில், உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்...
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டது...
முதலமைச்சரிடம் பணி ஆணைகளை வழங்கியபோது, கண் கலங்கிய பயனாளிகள்......
ஆறுதல் கூற முடியாமல் முதல்வர் விஜய்யும் கண் கலங்கியதால் விழா மேடையை ஆக்கிரமித்த சோகம்...
கரூர் சம்பவத்தில் அப்போதைய போலீசார் பெரும் நாடகம் நடத்தியதாக முதலமைச்சர் விஜய் சாடல்...
மக்கள் கூட்டம் இருந்தது தெரிந்தும் போலீசாரே தங்களை அழைத்து வந்து கரூர் கூட்டத்திற்குள் விட்டதாகவும் குற்றச்சாட்டு...
எதிர்கட்சிகள் பேச சொல்வதாகவும், பேசினால் ஓடி விடுவதாகவும் முதலமைச்சர் விஜய் விமர்சனம்...
பார்ட்டி பன்ட் என்ற ஒற்றை வார்த்தையால், எதிர்கட்சிகள் பதறிபோய் உள்ளதாகவும் சாடியுள்ளார்...
தமிழக அரசியலில் தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் கூட்டு களவாணிகள் என எதிர்கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய் பாய்ச்சல்...
தங்களுக்கு குதிரை பேரம் எல்லாம் தேவையில்லை என்றும், அரசியல் வியாபாரத்திற்கான பணம் வழங்கும் வெண்டிங் மெஷினே நீங்கள் தான் என்றும் சாடல்...
