Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.08.2026) | 6 AM Headlines | ThanthiTV
நேபாளத்தின் கோர பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது...
நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது....
பெரு வெள்ளத்தில்105 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...
நேபாளத்தை சேர்ந்த 93 பேர் உட்பட 341 வெளிநாட்டவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
கும்பகோணம் தனியார் டிராவல்ஸ் மூலம் நேபாளம் சென்று 57 தமிழர்கள் வெள்ள பாதிப்பில் சிக்கினர்...
20 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தஞ்சமடைந்த நிலையில், 37 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை...
நேபாளத்தின் போட்டே கோசி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு...
நீர்மின் நிலையங்கள், வணிக வளாக கட்டிடங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இயற்கையின் கோர தாண்டவக் காட்சிகள் வெளியாகியுள்ளது...
10 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய காட்டாற்று வெள்ளம் திபெத்தின் கியிரோங் வணிக கட்டடத்தை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது...
கட்டடங்களை தகர்த்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் பாய்ந்த வெள்ளத்தால் சீனா-நேபாள எல்லைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு...
