Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.08.2026)

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு...

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது...

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்...

வேளாண் திட்டங்களுக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 12

ஆயிரத்து 700 கோடி ரூபாய் அதிகம் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

2026-27 நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் கூறியுள்ளார்...

3 ஆயிரம் கோடியில் மூலதன கடன் மற்றும் 500 பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்...

சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது....

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி திருத்தச் சட்ட மசோதாவை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் அறிமுகம் செய்து வைக்கிறார்....

தமிழகத்திற்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்ய கோரி சட்டப் பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது...

வரி பகிர்வில் வெளிப்படையான சமமான நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி தனித்தீர்மானம்...

X

Thanthi TV
www.thanthitv.com