Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2025)| 6 PM Headlines | ThanthiTV
- கரூர் துயர சம்பவத்தின் உண்மை நிலை தெரிய CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்....எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....
- கரூர் பிரசாரத்தில் உயிர்சேதம் ஏற்படும் என தவெகவின் ஆனந்த், நிர்மல் குமாரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை...போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது...கால தாமதம் ஆனதால், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் சோர்வு அடைந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
- அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதம் செய்யப்பட்டதாக எஃப்ஐஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது...மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால் கீழே நின்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கியதில் 11 பேர் உயிரிழந்ததாவும் கூறப்பட்டுள்ளது...
- ஒரே இரவில் 39 பேருக்கு எப்படி பிரேத பரிசோதனை நடந்தது? என, தவெக தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்...மக்கள் கூட்டமே விஜய் காலதாமதத்திற்கு காரணம் எனவும், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்...
Next Story
