மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2025) | 6 PM Headlines
- பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன...
- ஜிஎஸ்டி வரி குறைப்பு சாதாரண மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்...மாநிலங்களின் வரி வருவாய்க்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் தீர்மானம்...
- "மாநில வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பயனளிக்காது" என்று மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்..."ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மாநில வருவாயை குறைக்கக் கூடாது" என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்...
- சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்...
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பார்க்கிங் விவகாரத்தில் மாற்று சமூக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்...
- காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்...
- தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...
Next Story
