Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது, தன்னை பதுங்கு குழிக்கு செல்ல ராணுவ செயலாளர் அறிவுறுத்தியதாக, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் பதுங்கு குழிக்கு செல்ல, தான் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்...
  • தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் உளுந்தூர்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்... சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர்...
  • ஆபரேஷன் சிந்தூரின் போது நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார்... இந்தியாவின் தாக்குதலில் விமான தளம் சேதம் அடைந்த‌தாகவும் அவர் கூறினார்..
  • மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி சென்ற பிரேமலதா, விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்...
  • ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டவர் விஜயகாந்த் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவருக்கும் உதவும் உயர்ந்த உள்ளத்தால், அளவில்லாத அன்பை பெற்றவர் விஜயகாந்த் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்