Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2025) | 6 PM Headlines | ThanthiTV
- விஜய் பிரசாரத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்படவில்லை....போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி அளித்துள்ளார்....
- விஜய் பிரசாரத்திற்கு 500 காவலர்கள் பாதுகாப்பு வழங்கியதாக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்....கூட்டம் அதிகமாக இருப்பதை உணர்ந்தும் மக்கள் முன்னோக்கி சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
- விஜய் பேசும்போது மின்தடை ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி கூறியுள்ளார்....தொண்டர்கள் மரத்தில் ஏறியதால் விபரீதம் ஏற்படக்கூடாது என சிறிது நேரம் மட்டும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு விஜய் வருவதற்கு முன்பே வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்....
- கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது...10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலில் உயிரிழந்த 40 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது....அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 111 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....
Next Story
