Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.01.2026) | 6 AM Headlines | Thanthi TV
- ஜனநாயகன் சென்சார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. படம் சென்சார் குழுவின் மறு ஆய்வுக்கு அனுப்பப்படுமா? அல்லது உடனடியாக சென்சார் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- அல்லு அர்ஜுன் படத்திற்கு பின் விக்ரம் 2, கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படங்களை நிச்சயம் இயக்குவேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்... லைட் ஹார்ட் படமாக கேட்டதால் ரஜினி மற்றும் கமல் சேர்ந்து நடிக்கும் படத்தை இயக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்...
- ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 15 ஆயிரத்து 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்... வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

- தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் நேர்காணல் நடத்துகிறார் பாமக தலைவர் அன்புமணி... அன்புமணி தரப்பில் போட்டியிட 500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்த நிலையில், பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது...
Next Story