Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.12.2025) | 6 PM Headlines | Thanthi TV

x
  • கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.... ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப்கள், 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்... வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க ஆயிரத்து 708 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காத 10 லட்சம் பேருக்கு எந்த முறையில் நோட்டீஸ் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.. வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீட்டிற்கே வந்து நோட்டீசை வழங்குவார்கள், ஆவணங்களை வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
  • நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு உறைபனிக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... சென்னையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது..
  • 2026 ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்... ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது...

Next Story

மேலும் செய்திகள்