Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.01.2026) | 6 PM Headlines | ThanthiTV

x
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று காலையில் 560 ரூபாய் உயர்ந்த நிலையில், மதியம் மேலும் ஆயிரத்து 40 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது.
  • பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் அழைத்து சென்ற ரவுடி வெள்ளைகாளியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு... மதுரையில் இருந்து புழல் சிறைக்கு ​ரவுடி வெள்ளைக்காளியை அழைத்து சென்ற போது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
  • கைதிகளுடன் சாப்பிடும் போது சைலொ காரில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியது.. வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்த நிலையில், ரவுடி வெள்ளைக்காளி காயம் இன்றி உயிர் தப்பினார்...
  • சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் தளத்தில் பேசுபொருளாகி உள்ளது
  • எங்களுக்கு விசில் தேவை இல்லை. குக்கரிலேயே விசில் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்... பாஜகவின் தேர்தல் அறிக்கை வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்...

Next Story

மேலும் செய்திகள்