Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.12.2025)| 6 PM Headlines | ThanthiTV

x
  • சென்னையில் அதிமுக - பாஜக இடையே நடைபெற்ற முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது... பாஜக போட்டியிடும் தொகுதிகள், விருப்பமுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது...
  • தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார். மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • பாஜகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்
  • தொகுதிபங்கீடு குறித்து அதிமுக - பாஜக இடையே ஓரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது... பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்...
  • 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் ஒதுங்கி இருக்க மாட்டேன் என சசிகலா கூறியுள்ளார். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்