Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.12.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்... தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 332 பேரும், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
  • தமிழகத்தில் SIR மூலம் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் மற்றும் 2 வாரங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து, 25 ஆயிரத்து18 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 243 பேரும், ஆண் வாக்காளர்கள் - 12 லட்சத்து 47 ஆயிரத்து 690 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 743 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்....
  • சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்-ன் சொந்த தொகுதியான எடப்பாடியில், இறந்தவர்கள், இரட்டைப்பதிவு என 26 ஆயிரத்து 375 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்...
  • தமிழகத்தில் இறந்தவர்களாக கண்டறியப்பட்ட 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேரும், இரட்டைப்பதிவாக 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேரும், இடம்பெயர்ந்த 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... தமிழகத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகபட்சமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்