Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- விஜயின் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது... சென்சார் சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்று விசாரணை நடக்கிறது...
- சூழல் மேலும் மோசமாகும் என காவல்துறை கூறியதால் கரூரில் இருந்து வெளியேறியதாக சிபிஐ-யிடம் விஜய் தெரிவித்துள்ளார்... கூட்ட நெரிசலின்போது தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்
- பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...
- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது... சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்க உள்ள நிலையில்,சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்...
- பரபரப்பான சூழலில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கூடுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு... செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மேலிடப் பொறுப்பாளர்கள் முக்கிய ஆலோசனை...
Next Story
