Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது... 234 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது....
- தமிழகத்தில் SIR மூலம் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் மற்றும் 2 வாரங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
- தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து, 25 ஆயிரத்து18 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்... பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 243 பேரும், ஆண் வாக்காளர்கள் - 12 லட்சத்து 47 ஆயிரத்து 690 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 743 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்....
- கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது... 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம், அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 99 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. போட்டி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...
Next Story
