Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.11.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • மதுரை மற்றும் கோவைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.... போதிய மக்கள் தொகை இல்லை எனக்கூறி, தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது...
  • வங்க கடலில் வரும் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது... 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....
  • கடலூர், மயிலாடுதுறையில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
  • நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்... விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்