Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.01.2026) | 6 PM Headlines | Thanthi TV

x
  • பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்... பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலிலேயே முண்டியடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி வருகின்றனர்...
  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது... வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்கள் நீக்​கப்பட்ட நிலையில், 13.3 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்...
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார்.. கடந்த 12ஆம் தேதி விஜயிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளை 2வது முறையாக ஆஜராகிறார்..
  • தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.... ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது...
  • புத்தக வாசிப்பால் அறிவுத்தீ பரவ வேண்டும் என சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர்வதேச புத்தக கண்காட்சி அறிவு பரிமாற்ற நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்