Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.12.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... பிரதமர் மோடியை அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்கு காரில் அழைத்துச் சென்ற அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி, அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்...
  • எத்தியோப்பா பிரதமருடனான சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, வளரும் நாடுகளின் குரலாக இருநாடுகளும் சர்வதேச அரங்கில் இணைந்து செயல்படும் என உறுதி அளித்தார்... எத்தியோப்பியாவின் கல்வி வளர்ச்சியில் இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கல்வியே விடுதலை அளிக்கும் எனத் தெரிவித்தார்...
  • அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்... ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வலுவான உறவு குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
  • எத்தியோப்பியாவின் மிகவும் உயரிய 'தி கிரேட் ஹானர் நிஷான்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது... இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் விருதை சமர்ப்பிப்பதாக பிரதமர் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
  • ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கிரீனை 25.2 கோடிக்கும், இலங்கை பவுலர் பதீரானாவை 18 கோடிக்கும் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது... கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கே.கே.ஆர். அணிக்கு ஏலம் போன வெங்கடேஷ் ஐயரை, இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்