Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.... பிரதமருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.....
- 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்... காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரை நீக்கி, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 24 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.... வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...
- சட்டமன்றத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்., மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மெக்வால், முரளிதர் மோஹல் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், நடவடிக்கை எடுக்க தாமதம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது... ஜனவரி 6ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... வழக்கு தொடர அனுமதி பெறாமல், ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....
Next Story
