Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.01.2026) | 6PM Headlines | ThanthiTV

x
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் புத்தாடை மற்றும் இதர பொருட்களை வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்... ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக மக்கள் அதிகளவில் வருகை தந்ததால், விற்பனை களைகட்டியது...
  • இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்... இலங்கை அரசு கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு மாற்றம், மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்...
  • கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜர் ஆகிறார். சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமான மூலம் விஜய் டெல்லி செல்கிறார்
  • தொழில் வரியில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.. பிப்ரவி15ஆம் தேதி தமிழகம் முழுவதும் மருந்தகங்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானதால், ஈரான் ஹை அலர்டில் உள்ளது... மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மற்றும் இஸ்ரேலை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்