Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2026) | 6PM Headlines | Thanthi TV

x
  • தமிழக அரசின் புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியாகி உள்ளது.. ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது...
  • தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. பெயரை நீக்க 21 ஆயிரத்து 366 விண்ணப்பம் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்... தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்...
  • தவெகவுடன் கூட்டணியா என சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார்..... தை பிறந்தால் உறுதியாக வழி பிறக்கும் என தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்