Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2026) | 6PM Headlines | Thanthi TV

x
  • ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்க பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது.. வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகாது என்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது...
  • சென்சார் சான்றிதழுக்காக காத்திருக்காமல் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பது ஏன்? என்று படக்குழுவிற்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.. சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காதது ஏன்? என்றும் அவர் வினவினார்..
  • பராசக்தி திரைப்படத்தில், தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.... இந்தி திணிப்பு தொடர்பான வசனங்கள் மற்றும் "தீ பரவட்டும்" என்ற வசனம் "நீதி பரவட்டும்" என்றும் மாற்றப்பட்டுள்ளது....
  • நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு, நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உச்சம் தொட்டது... இன்று வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் ஜனவரி 13, 14ம் தேதிகளில் பன்மடங்காக கட்டணம் உயர்ந்துள்ளது...
  • சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்