Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.01.2026) | 6 PM Headlines | ThanthiTV
- தங்கம் விலை காலையில் 640 ரூபாய் கூடிய நிலையில், மாலை மீண்டும் 640 ரூபாய் உயர்ந்தது... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா... சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது..
- சென்னை பனையூர்அலுவலகத்தில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்... புதுச்சேரியை சேர்ந்த எல்.பெரியசாமி உட்பட 5 முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாக தெரிவிக்கபப்ட்டுள்ளது...
- ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது... பெண்களின் நலன், பாலின சமத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்கிற தலைப்பில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு... வரும்19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றப்பட்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
Next Story
