Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2026) | 6 PM Headlines | ThanthiTV
- புதுக்கோட்டையில் நடைபெறும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு... பொதுக்கூட்ட மேடைக்கு வந்த அமித்ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
- நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
- ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்... அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
Next Story
