Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
- கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்...
- சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக சுமார் 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது.. இதில் 5 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
- மதுரையில் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது... இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்...
- கனமழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ மருத்துவ குழுக்களை அனுப்பிய இந்தியா... iaf-c-17 விமானம் மூலம் 70 பேர் கொண்ட குழு கொழும்பு சென்றடைந்தனர்...
Next Story
