மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025)

x

நீலகிரி, கோவை மலைப்பகுதியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகை...

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பிரதமர் பங்கேற்பதாக தகவல்


ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்களை கடுமையாக சாடிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...

அனைத்து துறைகளிலும் இன்னும் வளர்ச்சி தேவை என சென்னை ஐஐடி விழாவில் பேச்சு

ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டம்...

நிதித்துறை உள்ளிட்ட 6 துறை திட்டங்களின் நிலை குறித்து முக்கிய ஆலோசனை...


அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

கால வரம்பை குறிப்பிட்டு 21ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...


தனது வீட்டில், தன் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...

யார் வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம்...

உங்களைத்தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என அன்புமணி உருக்கம்...

தனது பெயரை யாரும் போடக்கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில் அன்புமணி அறிக்கை...


Next Story

மேலும் செய்திகள்