மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2025) | Thanthi TV
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... நெல்லை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
முழு கொள்ளளவை எட்டியது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை...கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
ஒகேனக்கல்லில் 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நீர்வரத்து...பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சி மற்றும் காவிரி கரையோரங்களில் குளிக்கவும் தடை...
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால், 66 அடியை எட்டிய வைகை அணை...5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை...
தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது..
3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், தமிழ்நாடு-கேரள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி...
தூத்துக்குடியில், விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து, கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார்....
பிரதமர் வருகையையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு...
11 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணி...
பிரதமர் பயணிக்கும் ஹெலிகாப்டர் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தது...
புதிய ஹெலிபேட் மைதானத்தில் முன்னோட்ட சோதனை...
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு...
தான் மருத்துவமனையில் இருப்பதால், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
திருச்சி விமான நிலையத்தில் இன்று இரவு 10.45 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல்...
