இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-08-2025) | 7PM Headlines | Thanthi TV

x
  • ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தை பாதுகாப்பாக காற்று இறக்கம் செய்யும் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது..
  • தமிழகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
  • ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது...
  • DRDO, தனது புதிய வான்பாதுகாப்பு ஆயுத சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது... எதிரி விமானங்கள் மற்றும் ட்ரோன்களை விரைவாக தடுக்க இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது..
  • ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கிய ஆவணங்கள் வெளியாகி உள்ளது....
  • தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்