காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22.07.2025) | ThanthiTV
- குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா...
- குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் இனிமையான பணி உறவுக்கு நன்றி என ஜெகதீப் தன்கர் உருக்கம்...பிரதமர் மோடியின் அசைக்க முடியாத ஆதரவுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி...
- "பயங்கரவாதத்தின் இலக்கை ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்த்துள்ளோம்"...நம் ராணுவத்தின் 100 சதவீத வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் பறைசாற்றுகிறது எனவும் பிரதமர் மோடி புகழாரம்...
- பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி...
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...
- குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
- ...சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் எழுதிய "அவரும் நானும்" நூலின் இரண்டாம் பாகம் நூல் வெளியீடு....தாயார் துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை குடும்பத்தினருடன் மேடையிலேயே பெற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்...
- பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி, விழாவுக்கு வந்த துணை முதல்வருக்கு நன்றி எனக்கூறிய துர்கா ஸ்டாலின்..
- முதலமைச்சர் ஸ்டாலினின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்...
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்...மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்...
- முதலமைச்சர் ஸ்டாலினிடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார், பிரதமர் மோடி...
- முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்...மருத்துவமனையில் இருந்தபடி அலுவல் பணியை மேற்கொள்வார் என தகவல்...
- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை....பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு திரும்புவார் என அறிவிப்பு...
Next Story
