இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | Thanthi TV
நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு...
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி...
வழிநெடுகிலும், ஏராளமானோர் குவிந்து உற்சாக வரவேற்பு...
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி குற்றச்சாட்டு...
திரிணாமுல் காங்கிரசை அகற்றினால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் பேச்சு...
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம் ஆத்மி...
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை, எம்.பி. சஞ்சய் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான டிஆர்எப்-பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு...
இந்தியா-அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக உறுதிப்படுத்துகிறது என நம்பிக்கை..
பொதுமக்களின் குறைகளை காவலர்கள் நியாயமாக கேட்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...
காவல்துறையில் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கருத்து...
தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும் தான் என, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் திட்டவட்டம்...
திமுகவுக்கு எதிராக தவெக ஓரணியில் இணைய வேண்டும் என ஈபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் தவெக தரப்பில் விளக்கம்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி மோசடி...
ஒரு கிட்னிக்கு 10 லட்சம் பேரம் பேசி பணத்தைத் தராமல் இடைத்தரகர்கள் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்...
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிக்குழு அமைப்பு...
கிட்னி விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து விசாரணை...
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்...
திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் உத்தரவு..
