Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | 11 PM Headlines | Thanthi TV
வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவிப்பு...
முதற்கட்டமாக 8 வந்தே பாரத் ரயில்களில் புதிய நடைமுறை அமல்...
பொதுமக்களின் குறைகளை காவலர்கள் நியாயமாக கேட்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...
காவல்துறையில் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கருத்து...
மக்களின் செல்வாக்கை திமுக இழந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
அதிமுக 210 தொகுதிகளில் வெல்லும் எனவும் நம்பிக்கை..
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கில், காவலர் பூபாலன் மற்றும் அவரின் தந்தையும் இன்ஸ்பெக்டருமான செந்தில்குமரன் பணியிட நீக்கம்...
மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு...
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கில், தலைமறைவான போலீஸ் குடும்பத்தை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு...
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை...
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிக்குழு அமைப்பு...
கிட்னி விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து விசாரணை...
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...
குற்றவாளியை பிடிக்க, தமிழக - ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை...
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்கள் அமைப்பு..
சிறுமி வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற பகுதியில்
பதிவான செல்போன் சிக்னல், வாகன எண்கள் சேகரிப்பு...
கோவையில் 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்,
கைதான 7 பேரும் குற்றவாளி என தீர்ப்பு...
7 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து, கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி...
நெல்லை வீரவநல்லூர் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு...
பள்ளி தரப்பின் புகாரை தொடர்ந்து, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் வீரவநல்லூர் போலீசார்....
