மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) |
நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்...
மழைக்காலம் துவங்குவதற்குள் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...
காமராஜர் பற்றிய சர்ச்சைக்குரிய மற்றும் வீண் விவாதங்களை தவிர்ப்போம்...
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள்...
15 பேருக்கும் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு...
தமிழகம் முழுவதும் 12 தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு...
பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம்...
சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை
மதுபோதையில் தாக்கிய 4 மாணவர்கள்...
மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து பள்ளிகல்வித்துறை உத்தரவு...
நாகையில் தனியார் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை...
நீதி கேட்டு மாணவ அமைப்புகள், உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு...
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...
28 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்குப்பதிவு செய்ததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு...
உத்தர பிரதேச மாநிலம், பருக்காபாத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் திடீர் உடல்நலக்குறைவு...
குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவரும் நிலையில், 7 வயது சிறுமி உயிரிழப்பு...
