Today Headlines | காலை 11 மணி தலைப்புச்செய்திகள் (23.09.2025) 11 AM Headlines | ThanthiTV
- பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை, வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது...போரூர் - கோடம்பாக்கம் இடையே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...
- மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் மாணவனை ரேக்கிங் செய்த சக மாணவர்கள்....வீடியோ வெளியான நிலையில் 3 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, விடுதி வார்டன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...
- மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவில்லை என சாலையோர கடைகளுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கோவிலில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது....
Next Story
