Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 99 ஆயிரத்து 200 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. பைரவ் மார்க் பகுதியில் காற்றின் தரம் 433ஆக பதிவான நிலையில் மூடுபனி சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
  • அசாம் மாநிலம் மாலிகான் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 7 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதில் ரயில் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
  • டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று மதியம் 1.30 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தொடர் தொடங்கும் நிலையில் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
  • அடிலெய்டில் நடைபெற்றுவரும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா 435 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்