Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிலர் காயம் அடைந்த நிலையில் 6 கார்கள் சேதம் அடைந்தன.
  • 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதி மணி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
  • வருகிற 18ம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்திற்கு அறநிலையத்துறை கூடுதலாக 5 நிபந்தனைகள் விதித்துள்ளது. இடம் எப்படி கொடுக்கப்பட்டதோ அதே நிலையில் மீண்டும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை நெருங்குவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
  • டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்... அக்‌ஷர்தம் பகுதியில் காற்றின் தரக்குறியீடு மிகவும் ஆபத்தான அளவான 493ஐ எட்டியது...

Next Story

மேலும் செய்திகள்