Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13.01.2026) | 11AM Headlines | ThanthiTV
- சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.... பல்வேறு விவசாய சங்ங்களை சேர்ந்த நிர்வாகிகள் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி மகிழ்ந்தனர்..
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது..... ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 170 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
- கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் இன்று தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார்.. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. நேற்று வரை 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது...
- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது..
Next Story
