Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.10.2025) | 1PM Headlines | ThanthiTV

x
  • வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27ஆம் தேதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது..
  • தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வரும் 27ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது... சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது...
  • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது...அணையில் இருந்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
  • தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 9வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.....காட்டாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதியை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்