Today Headlines |மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.09.2025) | 1 PM Headlines | Thanthi TV

x
  • கவர்ச்சியாக பேசி சிலர் பின்னோக்கி இழுக்க முயற்சிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்...இறுதிவரை படிப்புதான் துணை நிற்கும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்...
  • 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம், விருது பட்டயத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்...
  • நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளன...எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பாடகர் யேசுதாஸ்-க்கு வழங்கப்பட உள்ளது...
  • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருச்செந்தூரில் உள்ள மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் மரியாதை செலுத்தினர்...
  • சென்னை, மதுரையில் நடைபெற உள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...இந்த தொடரில் 29 அணிகள் பங்கேற்க உள்ளதாகவும், நவீன வசதிகளுடன் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
  • ஈ.சி.ஆர். சாலையில் உள்ள நடிகர் ரவி மோகன் இல்லத்திற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது...கடன் தவணை செலுத்தாத‌தால் தனியார் வங்கி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்