Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.01.2026)| 1 PM Headlines | ThanthiTV
- என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.... கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரு குடும்பமாக இணைந்து திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்...
- ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கவே என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்திருப்பதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.... திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.... மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்றும் அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
- சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக-வை தற்போது வரை யாரும் அணுகவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.... என்.டி.ஏ. கூட்டணியில் இணைவது குறித்து பாஜக தரப்பில் யாரும் பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
- நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...... காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு வழங்கக்கோரி கட்சி சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது..
Next Story
