Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 99 ஆயிரத்து 200 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- திமுகவை தீய சக்தி என விமர்சித்து விட்டு, 2021ல் ஏன் ஆதரவாக வாக்களித்தீர்கள்...? ஈரோடு கூட்டத்தில் விஜய் திமுக தீய சக்தி என விமர்சித்து பேசிய நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்...
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பகுதிநேர ஆசிரியர் வீட்டில் 15 சவரன் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அசாம் மாநிலம் மாலிகான் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 7 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதில் ரயில் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
Next Story
