Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.01.2026) | 1PM Headlines | ThanthiTV

x
  • ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்கக்கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.... உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்ட நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெறுகிறது...
  • குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள வரவேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.... ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியும், அந்நிகழ்வை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது...
  • சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்தார்.... தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
  • சட்டப்பேரவையில் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியது, தவறான தகவல் என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.... வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த ஆளுநரின் கருத்தும் உண்மைக்கு புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார்...
  • கிரீன்லாந்து விவாகரம் குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.... உலகின் பாதுகாப்பிற்காக, கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்