Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2025) | 1 PM Headlines | ThanthiTV
- உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால், ரிஷிகேஷில் உள்ள சந்திரபாகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது...நெடுஞ்சாலையை வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்களில் சிக்கியவர்கள் மாநில பேரிடர் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்...
- உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட மேக வெடிப்பு குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்...
- வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே டெல்லியில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது...
- சென்னை தலைமைச் செயலகத்தில் கைவினைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்...7 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதை முதல்வர் வழங்கினார்...
- குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்...
- என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் விலகியதால் எந்த தாக்கமும் ஏற்படாது என பாஜக மாநில துணை தலைவர் குஷ்பூ தெரிவித்துள்ளார்...
- அதிமுக ஆட்சியை பாஜக தான் காப்பாற்றியது என ஈபிஎஸ் பொய் சொல்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்...
Next Story
