Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2025)| 1 PM Headlines | ThanthiTV

x
  • திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா?.... தீபம் விவகாரம் தொடர்பான வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • திருப்பரங்குன்றத்தில் ஒரே ஒரு தீபத்தூண் தான் இருப்பதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பாரம்பரியமாக நாயக்கர் காலத்தில் இருந்தே வழக்கமான இடத்தில் தீபமேற்றப்படுவதாகவும் கூறியுள்ளது.
  • சட்டமன்றத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்., மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மெக்வால், முரளிதர் மோஹல் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரம் தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
  • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்