Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.01.2026) | 1 AM Headlines | ThanthiTV
- டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்...... புது பானையில் பொங்கலிட்டு பூஜை செய்த பிரதமர் மோடி, பசுக்களுக்கு உணவளித்தார்...
- டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வணக்கம் என்று உரையை தொடங்கிய பிரதமர், தமிழில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்... பொங்கல் பண்டிகையை கொண்டாட தமக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்...
- டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்....
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.... ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
- போகி பண்டிகை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது...தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 200 ஆக பதிவாகி உள்ளது..
Next Story
