Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.01.2026)| 1 PM Headlines | ThanthiTV

x
  • கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 8 போலீஸாரிடம் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்... கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ள போலீஸாரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்...
  • பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று 4 ஆயிரத்து 882 பேருந்துகள் இயக்கப்படுகின்றன... வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக 2 ஆயிரத்து 790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
  • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. நேற்று வரை 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது...
  • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது... கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தை போலவே, வெள்ளி விலை கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது...... ஒரு கிராம் வெள்ளி 292 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
  • திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளனர்... பயிர் சேத விவரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்