Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.10.2025) | 1 PM Headlines | ThanthiTV
- தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்...ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தவெக உட்கட்டமைப்பை மாற்ற விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...தவெகவில் 2ம் கட்ட தலைவர்களை நிர்ணயம் செய்ய விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது...
- 9 நாள் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன...பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது...
Next Story
