Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது....
- மாற்றுத்திறனாளிகள் அரசில் முழுவதுமாக சார்ஜ் எடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்... சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
- சஞ்சார் சாத்தி APP மூலம் எந்த விதமான உளவு வேலையும் நடைபெறாது என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்... சஞ்சார் சாத்தி APP ஆக்டிவேட் செய்தால் மட்டுமே இயங்கும் எனவும், இதன் மூலம் 20 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...
- காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது... ஈரோடு மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு... ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாயாக சரிந்துள்ளது...
Next Story
