Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2026) | 11AM Headlines | Thanthi TV
- வீர மங்கை வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
- ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
- சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.4 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மார்கழி மாத பெளர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ரயில்களில் முண்டி அடித்துக்கொண்டு பக்தர்கள் ஏறினர்.
- தமிழகத்தில் காவலர்கள், தலைமை காவலர்கள், SSI-கள் என 24 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இடமாற்றம் செய்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
- வட மாநிலங்களில் பவுஷ் பூர்ணிமா புனித நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.
- விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது.வரும் 9ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
- பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குலுவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.தூய்மையான காற்றை அனுபவித்து ரம்மியமான இயற்கை சூழலை கண்டுகளித்து வருகின்றனர்.
Next Story
