Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சவரனுக்கு மூவாயிரத்து 360 ரூபாய் குறைந்துள்ளது... ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 23 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது.... ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
  • சென்ட்ரல் - கோயம்பேடு - ஏர்போர்ட் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.... பயணிகள் நீல வழித்தடத்தை பயன்படுத்த மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..
  • டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்... பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால், பயணிகள் விமான நிலையம் வரும் முன்னர், விமான புறப்பாடு நேரத்தை உறுதி செய்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்...
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மிளகாய்ப்பொடி தூவி இரண்டு சவர செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.... வழிப்பறி கொள்ளையர்களின் அடாவடியால் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்..

Next Story

மேலும் செய்திகள்